ஒடிஸாவில் ஒரு ரூபாய் விலையில் அரிசி, பருப்பு, உப்பு - பாஜக வாக்குறுதி

ஒடிஸா மாநிலத்தில், பாஜக ஆட்சிக்கு வந்தால், தலா ரூ.1 விலையில் அரிசி, பருப்பு, உப்பு ஆகியவை வழங்கப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இங்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது
 | 

ஒடிஸாவில் ஒரு ரூபாய் விலையில் அரிசி, பருப்பு, உப்பு - பாஜக வாக்குறுதி

ஒடிஸா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக ஆட்சிக்கு வந்தால், தலா ரூ.1 விலையில் அரிசி, பருப்பு, உப்பு ஆகியவை வழங்கப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

இங்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இன்னும் 3 கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான், கட்டாக்கில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது:

ஒடிஸாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 3.26 கோடி பயனாளிகளுக்கு கிலோ ஒன்றுக்கு தலா ரூ.1 என்ற விலையின் அடிப்படையில் 5 கிலோ அரிசி, 500 கிராம் பருப்பு, 500 கிராம் உப்பு ஆகியவை வழங்கப்படும் என்றார் அவர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP