கூட்டணிக்கு திரும்புங்கள் - பீகார் முன்னாள் முதல்வருக்கு பா.ஜ.க. அழைப்பு

ஜிதன் ராம் மாஞ்சி எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி, எதிர்க்கட்சி முகாமில் இணைந்தபோதும் கூட, நாங்கள் கவலை தெரிவித்தோம். அவர் கூட்டணிக்கு திரும்பினால் உரிய மரியாதை அளிக்கப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.
 | 

கூட்டணிக்கு திரும்புங்கள் - பீகார் முன்னாள் முதல்வருக்கு பா.ஜ.க. அழைப்பு

பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்ப வேண்டும் என்று பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து மாநில பா.ஜ.க. தலைவர் நித்தியானந்த ராய், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மாஞ்சி மீது நாங்கள் அளவுகடந்த மரியாதை வைத்துள்ளோம். அவர் எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி, எதிர்க்கட்சி முகாமில் இணைந்தபோதும் கூட, நாங்கள் கவலை தெரிவித்தோம். எதிர்க்கட்சி அணியான மகா கூட்டணியில் அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று அவர் கருதுவாரேயானால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அவர் திரும்பி வரலாம். நிச்சயமாக மாஞ்சிக்கு உரிய மரியாதை அளிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. மற்றும் லோக் ஜனசக்தி ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளன. எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா உள்ளிட்டவை மகா கூட்டணியில் உள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP