மேற்கு வங்கத்தில் போட்டியிட தயாரா? - அமித் ஷாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் சவால்

நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதியில் இருந்து போட்டியிட தயாரா என்று பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது. அப்படி அவர் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
 | 

மேற்கு வங்கத்தில் போட்டியிட தயாரா? - அமித் ஷாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் சவால்

நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதியில் இருந்து போட்டியிட தயாரா என்று பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது. அப்படி அவர் போட்டியிட்டால் 5 லட்சம் முதல் 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைவார் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், பிர்ஹம் மாவட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவரான அனுபிரதா மொண்டால் இந்த சவாலை விடுத்துள்ளார். இந்த மாநிலத்தில் பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அமித் ஷா கூறி வந்தார். அதுகுறித்து அனுபிரதா மொண்டால் கூறுகையில், “அமித் ஷாவுக்கு புத்தி இருக்கிறதா? அல்லது அதை இழந்துவிட்டாரா? எனத் தெரியவில்லை. பாஜக பலமாக இருக்கிறதென்றால் அவர் ஏன் பிர்ஹம் தொகுதியில் போட்டியிடக் கூடாது?’’ என்றார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP