மக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக கூறவில்லை: அமைச்சர் ராஜ்நாத் சிங்!

மக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக நாங்கள் சொல்லவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்
 | 

மக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக கூறவில்லை: அமைச்சர் ராஜ்நாத் சிங்!

மக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக நாங்கள் சொல்லவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

பிரபல தனியார் சேனல் ஒன்றிற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பேட்டியளித்தார். அப்போது, "பாஜக தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?" என்று ராஜ்நாத் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், "மக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய்  போடுவதாக நாங்கள் சொல்லவில்லை. கருப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக மட்டுமே கூறினோம். அவ்வாறு கூறியதற்கு ஏற்ப, அதற்கான நடவடிக்கையையும் எடுத்துள்ளோம். கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் வெளிநாட்டுகளில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று தான் கூறினோம்" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP