ராஜீவ் காந்தி இறந்தது விபத்தா? திக்விஜய்க்கு வி.கே. சிங் பதிலடி

‛‛புல்வாமா தாக்குதல் சம்பவத்தை, ‛விபத்து’ என குறிப்பிட்டுள்ள, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் விபத்தால் நிகழ்ந்ததா அல்லது பயங்கரவாத தாக்குதலால் நடந்ததா? என அவர் பதில் கூற வேண்டும்’’ என்று, மத்திய வெளியுறவு இணையைமச்சர் வி.கே.சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
 | 

ராஜீவ் காந்தி இறந்தது விபத்தா? திக்விஜய்க்கு வி.கே. சிங் பதிலடி

‛‛புல்வாமா தாக்குதல் சம்பவத்தை, ‛விபத்து’ என குறிப்பிட்டுள்ள, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் விபத்தால் நிகழ்ந்ததா அல்லது பயங்கரவாத தாக்குதலால் நடந்ததா? என அவர் பதில் கூற வேண்டும்’’ என்று, மத்திய வெளியுறவு இணையைமச்சர் வி.கே.சிங் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது கடந்த மாதம், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், துணை ராணுவப் படையை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். 

இதையடுத்து, பாகிஸ்தானில் பதுங்கியிருந்து செயல்பட்டு வந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத முகாம் மீது, நம் விமானப்படை குண்டு மழை பொழிந்து, அந்த முகாம்களை தாக்கி அழித்தது. 

இதற்கு, நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது. உலக நாடுகளும் நம் நடவடிக்கையை கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. 

இந்நிலையில், பாகிஸ்தானில், நம் விமானப்படை நடத்திய தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என்பதற்கான ஆதாரத்தை, மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

விமானப்படை வீசிய குண்டு மழையில், பயங்கரவாதிகள் பஸ்பம் ஆகிவிட்டதாகவும், அதனால், இறந்தவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கூற முடியாது என, விமானப்படை தளபதி தெளிவாக விளக்கம் அளித்த பிறகும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இவ்வாறு பேசி வருகின்றன. 

இந்நிலையில், காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங், புல்வாமாவில், நம் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை, விபத்து என குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். 

திக்விஜய் சிங்கின் கருத்துக்கு, மத்திய அரசு மற்றும் பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து, மத்திய வெளியுறவு இணையமைச்சர் வி.கே.சிங் கூறியதாவது: 

‛‛ நம் நாட்டு வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் கொச்சைபடுத்தும் வகையில் பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. புல்வாமா தாக்குதலை விபத்து என குறிப்பிடும் திக்விஜய் சிங், காங்கிரசை சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம், பயங்கரவாத தாக்குதலால் நடந்ததா அல்லது அதுவும் ஒரு விபத்தா என விளக்க வேண்டும். இந்த கேள்விக்கு அவர் பதில் அளித்தால், அவர் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் கூற தயாராக இருக்கிறேன்’’ என்றார். 

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை விபத்து என குறிப்பிட்ட திக்விஜயின் கருத்து, நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP