காங்கிரஸ் தொண்டர்களின் டீ-சர்ட்டில் ராகுல் படம் மிஸ்சிங்!

உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு இன்று வருகை தரும் அந்த மாநிலத்தின் (கிழக்கு) காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேராவை வரவேற்கும் வகையில், அக்கட்சியினர் அணிந்துள்ள டீ-சர்ட்டில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் படம் இடம்பெறவில்லை.
 | 

காங்கிரஸ் தொண்டர்களின் டீ-சர்ட்டில் ராகுல் படம் மிஸ்சிங்!

உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு இன்று வருகை தரும் அந்த மாநிலத்தின் (கிழக்கு)  காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேராவை வரவேற்கும் வகையில், அக்கட்சியினர் அணிந்துள்ள டீ-சர்ட்டில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் படம் இடம்பெறாதது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில், பாஜக ஜெயித்து மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், "மீண்டும் நமோ" என்ற வாசகம் அடங்கிய டீ-சர்ட்களை பாஜகவினர் அணிந்து வருகின்றனர்.

அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சிலரும். ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக எம்எல்ஏ.க்கள் சிலரும். இந்த வாசகம் பொருந்திய டீ-சர்ட்டை அணிந்தபடி நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைக்கு தற்போது சென்று வருகின்றனர்.

இதே பாணியில், இன்று உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு வருகை தரும், அந்த மாநிலத்தின் (கிழக்கு) காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேராவை வரவேற்கும் விதமாக, காங்கிரஸ் தொண்டர்கள் அவரது உருவப்படம் பொருந்திய டீ-சர்ட்களை அணிந்துள்ளனர்.

பிரியங்காவுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அங்கு செல்லவுள்ள நிலையில், காங்கிரஸ் தொண்டர்களின்  டீ-சர்ட்டில் அவரது படம் இடம்பெறாதது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP