ராகுலா, ஸ்மிருதியா? அமேதியில் ஓய்ந்தது பிரசாரம்!

காங்., தலைவர் ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
 | 

ராகுலா, ஸ்மிருதியா? அமேதியில் ஓய்ந்தது பிரசாரம்!

காங்., தலைவர் ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. 

உத்தர பிரதேச மாநிலம் அமேதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் பா.ஜ., சார்பில் களம் இறங்கிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்த முறையும் களம் காண்கிறார். இருவர் இடையே கடும் போட்டி நிலவுவதால், தேர்தல் முடிவுகள் எப்படி அமையப்போகிறது என பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

இதனால், இந்த தொகுதி, அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றதாக மாறியுள்ளது. இங்கு தனக்கு பின்னடைவு ஏற்படலாம் என எண்ணியதாலேயே, ராகுல் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக பா.ஜ.,வினர் கிண்டல் அடித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஸ்மிருதிக்கு ஆதரவாக, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, இன்று பேரணியாக சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். அதே போல், அண்ணன் ராகுலுக்கு ஆதரவாக, அவரது தங்கை பிரியங்கா வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். நாளை மறு நாள் அமேதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP