பிரதமர் மோடி மீதான விமர்சனம்: ராகுலுக்கு தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பிரதமர் மோடி ஆதிவாசிகளை அழிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியது குறித்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் விளக்கமளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 | 

பிரதமர் மோடி மீதான விமர்சனம்: ராகுலுக்கு தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பிரதமர் மோடி ஆதிவாசிகளை அழிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியது குறித்து, அடுத்த 48 மணி நேரத்திற்குள் விளக்கமளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு இடங்களில் பிரச்சார பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். கடந்த  ஏப்ரல் 23ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் ஷாதால் என்ற இடத்தில் பேசிய அவர், "பிரதமர் மோடி ஒரு புதிய திட்டம் கொண்டு வர இருக்கிறார். ஆதிவாசிகள் மீது தாக்குதலை நடத்தி அவர்களை அழித்துவிட்டு, அவர்களின் இடங்களை அபகரிக்க திட்டமிட்டிருக்கிறார்" என்று பேசினார். இது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இது தொடர்பான புகாரில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எதன் அடிப்படையில் அவ்வாறு பேசினீர்கள் என்று அடுத்த 48 மணி நேரத்திற்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு விளக்கம் அளிக்கவில்லை எனில் ராகுல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP