அடுத்தமுறை அண்டை நாட்டில் தான் ராகுல் போட்டியிட வேண்டி வரும் : மத்திய அமைச்சர் கிண்டல்

அமேதியில் ராகுல் காந்தியை, ஸ்மிருதி இராணி தோற்கடித்து விடுவார். வயநாடு தொகுதியிலும் அவர் தோற்கடிக்கப்படுவார். இதனால், அடுத்தத் தேர்தலில் அண்டை நாடுகளில் உள்ள தொகுதியை அவர் தேட வேண்டியிருக்கும் என்றார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
 | 

அடுத்தமுறை அண்டை நாட்டில் தான் ராகுல் போட்டியிட வேண்டி வரும் : மத்திய அமைச்சர் கிண்டல்

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அடுத்தத் தேர்தலில் அண்டை நாட்டில் இருந்துதான் போட்டியிட வேண்டி வரும் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை, ஸ்மிருதி இராணி தோற்கடித்து விடுவார். . அமேதியில் தோல்வி உறுதி என்பது தெரிந்த காரணத்தினால்தான் ராகுல் காந்தி வயநாட்டுக்கு ஓடியிருக்கிறார்.வயநாடு தொகுதியிலும் அவர் தோற்கடிக்கப்படுவார். இதனால், அடுத்தத் தேர்தலில் அண்டை நாடுகளில் இருந்துதான் அவர் போட்டியிட வேண்டிவரும்.

வயநாட்டில் இடதுசாரிக் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகின்ற போதிலும், அவரை எதிர்த்துப் பேச ராகுல் காந்தி மறுக்கிறார். எதிரணி வேட்பாளர்களை எதிர்த்து பேசக்கூட முடியாது என்றால், அத்தகைய தலைவர் நாட்டை ஆள முடியாது என்றார் கோயல்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP