கூட்டணி குறித்து டெல்லி காங்கிரஸுடன் ஆலோசிக்க ராகுல் காந்தி முடிவு

டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி அமையும் என்று எதிபார்ப்பு நிலவியது. ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இந்நிலையில், கூட்டணிக்கான வாய்ப்புகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசிக்கவுள்ளார்.
 | 

கூட்டணி குறித்து டெல்லி காங்கிரஸுடன் ஆலோசிக்க ராகுல் காந்தி முடிவு

டெல்லி மாநிலத்தில் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.

இங்கு, ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பா.ஜ.க.வே கைப்பற்றியது. இந்த முறை தனித்துப் போட்டியிட்டால், மீண்டும் பா.ஜ.க.வுக்கு சாதகமாகி விடும் என்று காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் கருதின. இதையடுத்து, இரு கட்சிகளும் கூட்டணி சேர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று தொகுதி உடன்பாடு வரையில் பேசி முடிக்கப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனித்துப் போட்டியிட்டாலும் கட்சி வெற்றி பெறும் என்பது அவர்களது நம்பிக்கை. குறிப்பாக, டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அஜய் மக்கான் பதவி விலகினார்.

இத்தகைய சூழலில், ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுவதாகக் கூறி 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. ஆனாலும், ராகுல் காந்தி கூட்டணி அமைக்கும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP