41 பவுன் தங்கம், ரூ.15 கோடி சொத்துக்கு அதிபதி ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.15.88 கோடியாக உள்ளது. அவரிடம் 41 பவுன் தங்கம் உள்ளது. வயநாடு தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இந்த விவரங்களை ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
 | 

கடந்த 2014-ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்டபோது தனக்கு ரூ.9.4 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். தற்போது, அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார். அதே சமயம், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் நேற்று மனு தாக்கல் செய்தார் அவர்.

அதன்படி, ராகுல் காந்திக்கு ரூ.5.80 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.10.08 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பது தெரியவந்துள்ளது. மொத்த சொத்து மதிப்பு ரூ.15.88 கோடி ஆகும். அவருக்கு சொந்தமாக கார் கிடையாது. கையிருப்பில் ரூ.40,000 தொகையும், வங்கிக் கடன் உள்பட பல்வேறு வழிகளில் ரூ.72 லட்சம் கடன் உள்ளது என்றும் ராகுல் காந்தியின் பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP