பிரதமராகும் தகுதி உடையவர் ராகுல்: தேஜஸ்வி யாதவ்

காங்கிரஸ் தலைவர் ராகுல் இந்தியாவின் பிரதமராகும் தகுதியுடையவர், என பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரான லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

பிரதமராகும் தகுதி உடையவர் ராகுல்: தேஜஸ்வி யாதவ்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் பிரதமராகும் தகுதியுடையவர் என பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரான லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்த, எதிர்க்கட்சிகள் மத்தியில் இருந்து போதிய ஆதரவு இல்லாத நிலையில், பீகார் மாநிலத்தின் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், ராகுலுக்கு ஆதரவாக பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஜன அகான்ஷ பேரணியில் பேசியபோது, "ராகுல் காந்தி, பிரதமராவதற்கான திறனும், தகுதியும் உடையவர்" எனக் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த நாட்டின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 2014 தேர்தலில், பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து விட்டதாகவும், அதை நிறைவேற்றவில்லை என்றும் தேஜஸ்வி குற்றஞ்சாட்டியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP