கும்பமேளாவில் புனித நீராடி அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் பிரியங்கா?

காங்கிரஸ் கட்சியின், உத்தர பிரதேச மாநில கிழக்கு பகுதி பொது செயலராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா, தை அமாவாசையன்று, அலகாபாத் நகரின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, முறையாக அரசியல் பிரவேசம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

காங்., தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்காவுக்கு, அந்த கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதுடன், கட்சியின் பிரசார பீரங்கியாகவும் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தற்போது கும்பமேளா நடந்து வருவதால், பிப்., 4ம் தேதி தை அமாவாசை அன்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பின், முறைப்படி அரசியல் களம் காண பிரியங்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னரே, ராகுலுடன் சேர்ந்து, பத்திரிகையாளர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். 

அன்றைய தினம் நீராட முடியாமல் போனால், பிப்., 10 வசந்த பஞ்சமி அன்று புனித நீராடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP