பனியிலும், வெயிலிலும் பிரசாரம்: பிரதமர் மாேடிக்கு அமித் ஷா பாராட்டு

‛‛பிரதமர் நரேந்திர மாேடி, ஒரு லட்சம் கி.மீ.,க்கும் அதிகமாக பயணம் மேற்கொண்டு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும், பனி, வெயில் பாராமல் சுற்றி சுழன்று பிரசாரம் செய்துள்ளார். இதற்கு முன், சுதந்திர இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் அல்லது பிரதமரும் இப்படி பிரசாரம் செய்ததில்லை’’ என, பா.ஜ., தலைவர் அமித் ஷா பேசினார்.
 | 

டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது: ‛‛பிரதமர் நரேந்திர மாேடி, சற்றும் ஓய்வெடுக்காமல் உழைக்கக் கூடியவர் என்பதை இந்த நாடு அறியும். நாட்டு மக்களுக்காக பணியாற்றும் போது, அவர் எந்தவித ஓய்வையும் விரும்பமாட்டார். 

அதே உழைப்பை, தேர்தல் பிரசாரத்திலும் அவர் காட்டியுள்ளார். ஜனவரியில் துவங்கிய தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைந்தது. இதில், ஒரு லட்சம் கி.மீ.,களுக்கும் அதிகமாக அவர் பயணித்து தேர்தல் பிசாரதம் செய்துள்ளார். ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை, புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 

பனியிலும், வெயிலிலும் பிரசாரம்: பிரதமர் மாேடிக்கு அமித் ஷா பாராட்டு

மாேடி தலைமையிலான அரசு, 133 புதிய திட்டங்களை அறிவித்து, அவை கடைக்கோடி பயனாளி வரை சென்றடைந்ததா என்பதையும் சரி பார்த்தது. அதுவே, இந்த அரசாங்கத்தின் வெற்றி. அவர் குறைந்த பட்சம், 18 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம், 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவிய இடங்களில் பிரசாரம் செய்துள்ளார். 

பனி, புயல், மழை, வெள்ளம், வெயில் என எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்தார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் அவரை வரவேற்றனர். இதன் மூலம், மத்தியில் மீண்டும் பா.ஜ., தலைமையிலான அரசே அமையும், மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்பது உறுதியாகியுள்ளது’’ என அவர் பேசினார். 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP