பிரபல நடிகை வேட்பு மனு தாக்கல் செய்தார்

மக்களவை தேர்தலில், சுயேட்சை வேட்பாளாராக களமிறங்கும் நடிகை சுமலதா, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
 | 

பிரபல நடிகை வேட்பு மனு தாக்கல் செய்தார்

மக்களவை தேர்தலில், சுயேட்சை வேட்பாளாராக களமிறங்கும் நடிகை சுமலதா, இன்று தன‌து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ் சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது சொந்த தொகுதியான கர்நாடக மாநிலம் மாண்டியாவில், அவரது மனைவி சுமலதா சுயேட்சையாக களமிறங்கப்போவதாக  நேற்று அறிவித்திருந்தார். 

இந்த அறிவிப்பின் போது, கன்னட பிரபல நடிகர்கள் தர்ஷன் மற்றும் 'கேஜிஎப்' படப்புகழ் யஷ் உடன் இருந்தனர். இவர்கள் சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளனர்.

இந்த நிலையில், இன்று சுமலதா தன‌து வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு கன்னட திரையுலகினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP