ஜம்மு-காஷ்மீரில் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் ஒருசேர தேர்தல் - அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் கடந்த நவம்பரில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டது.
 | 

ஜம்மு-காஷ்மீரில் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் ஒருசேர தேர்தல் - அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இங்கு தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று தொடங்கி இன்றும் ஆலோசனை நடத்தி வருகிறார். மாநிலத்தில் பிரதானமாக இருக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் தேர்தல் ஆணையர் கலந்துரையாடினார். அப்போது, சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக அரசியல் கட்சிகள் தெரிவித்தன. அதே சமயம், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து அதை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தின.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜுன் மாதம் அரசுக்கான ஆதரவை பா.ஜ.க. வாபஸ் வாங்கியது. அதன் பிறகு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் இருந்து குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP