பிரதமர் மோடி ஒரு தீவிரவாதி - சந்திரபாபு நாயுடு சாடல்

பிரதமர் நரேந்திர மோடி ஒரு தீவிரவாதி. அவர் இந்நாட்டில் வாழுவதற்கு தகுதியில்லாதவர். அவருக்கு வாக்களித்தால் புதிய பிரச்னைகள் உருவாகும் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
 | 

பிரதமர் மோடி ஒரு தீவிரவாதி - சந்திரபாபு நாயுடு சாடல்

பிரதமர் நரேந்திர மோடி ஒரு தீவிரவாதி என்றும், அவர் இந்நாட்டில் வாழுவதற்கு தகுதியில்லாதவர் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார். இதுகுறித்து தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

சகோதரர்களே, உங்களிடம் ஒன்றை கூறிக் கொள்கிறேன். நரேந்திர மோடி மிக மோசமான தீவிரவாது. அவர் நல்ல மனிதர் அல்ல. சிறுபான்மையின சகோதர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். 

உங்கள் அனைவரிடமும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். நரேந்திர மோடிக்கு நீங்கள் வாக்களித்தால், புதிய பிரச்னைகள் பல உருவாகும். சிறுபான்மையினருக்கு ஆதரவாக நான் எடுத்த தடுப்பு நடவடிக்கைகள் உங்களுக்கு தெரியுமா? முத்தலாக் தடை சட்ட மசோதாவை அவரால் நிறைவேற்ற முடிந்ததா? உங்கள் எல்லோரையும் சிறையில் வைக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் நிறைவேறியதா? கோத்ராவில் என்ன நடந்தது. அங்கு 2,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த நாளில் நான் ஒருவன் மட்டுமே கேள்வி எழுப்பினேன். மோடி பதவி விலக வேண்டும் என்று முதல் நபராக நான் வலியுறுத்தினேன் என்றார் சந்திரபாபு நாயுடு.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP