ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 | 

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து, இன்று ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக மக்கள் புடைசூழ நடைபெற்றது. 

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இதையடுத்து, ஜெகன் மோகன் ரெட்டிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றுள்ள ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மத்திய அரசு ஆந்திராவின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும். மேலும் நாம் இருவரும் ஒன்றிணைந்து ஆந்திராவை வளர்ச்சியின் உயரத்திற்கு கொண்டு செல்வோம்" என்று கூறியுள்ளார். 

முன்னதாக, தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, இரு தினங்களுக்கு முன்பாக ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது . 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP