அருண் ஜேட்லியுடன் பிரதமர் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளது. இதையடுத்து, அமைச்சரவையை முடிவு செய்யும் பணியில் பாஜக கட்சித் தலைமை இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.
 | 

அருண் ஜேட்லியுடன் பிரதமர் சந்திப்பு!

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு சந்தித்து பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளது. இதையடுத்து, அமைச்சரவையை முடிவு செய்யும் பணியில் பாஜக கட்சித் தலைமை இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.

இந்த நிலையில், "அமைச்சரவையில் தமக்கு மீண்டும் இடம் வேண்டாம்" என அருண் ஜேட்லி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். "உடல்நிலை காரணமாக தாம் இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்றும் ஜேட்லி தமது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில், தனது நீண்டநாள் நண்பரும், அரசியலில் உற்ற தோழருமான அருண் ஜேட்லியை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பேசியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP