பவாருடன் சேர்ந்து பவர் காட்ட துடிக்கும் காங்கிரஸ்!

மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக -சிவசேனா கூட்டணியை எதிர்கொள்ள, தேசியவாத காங்கிரஸுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது.
 | 

பவாருடன் சேர்ந்து பவர் காட்ட துடிக்கும் காங்கிரஸ்!

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக -சிவசேனா கூட்டணியை எதிர்கொள்ள, தேசியவாத காங்கிரஸுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு அடுத்ததாக, அதிக மக்களவைத் தொகுதிகளை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 25 இடங்களிலும், சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிட உள்ளன. இவ்விரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி கடந்த மாதம் உறுதியானது.

மகாராஷ்டிரத்தில் வலுவான கூட்டணியாக விளங்கும் பாஜக -சிவசேனாவை எதிர்கொள்ள, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. இவ்விரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி நேற்று இறுதியானதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, அங்கு மொத்தமுள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் 26 இடங்களிலும்,  தேசியவாத காங்கிரஸ் 22 இடங்களிலும் போட்டியிட உள்ளன.

இருப்பினும், தங்கள் கூட்டணியில் மகாராஷ்டிரா நிர்மாண் சேனா கட்சியை சேர்க்க வேண்டும் என்ற தேசியவாத காங்கிரஸின் கோரிக்கையை, காங்கிரஸ் நிராகரித்துவிட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP