Logo

சில மணி நேரங்கள் முதல்வர்... பாஜக அரசுக்கு ரூபாய் 40,000 கோடியைக் கொடுத்தாரா பட்நவிஸ்?!

சில மணி நேரங்கள் முதல்வர்... பாஜக அரசுக்கு ரூபாய் 40,000 கோடியைக் கொடுத்தாரா பட்நவிஸ்?!
 | 

சில மணி நேரங்கள் முதல்வர்... பாஜக அரசுக்கு ரூபாய் 40,000 கோடியைக் கொடுத்தாரா பட்நவிஸ்?!

முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கும் 40,000 கோடி மத்திய நிதியை பாதுகாக்கவே திட்டமிட்டு நாடகம் நடத்தி கடந்த மாதம் மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்நவிசை பதவியேற்க வைத்தோம் என்று கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பாஜ எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த்குமார் ஹெக்டே பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்தை தேவேந்திர பட்நவிஸ் மறுத்துள்ள நிலையில், தற்போது மகராஷ்டிராவில் ஆளும் சிவசேனா, பட்நவிஸுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
கடந்த மாதம் மகாராஷ்டிராவில் சிவசேனா - என்சிபி - காங்கிரஸ் கூட்டணி புதிய அரசு அமைக்க தயாராகிக் கொண்டிருந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் ஆதரவுடன் நவம்பர் 23ம் தேதி யாரும் எதிர்பாராதவிதமாக அதிகாலை நேரத்தில் அவசர, அவசரமாக பாஜ ஆட்சி அமைத்தது. 

சில மணி நேரங்கள் முதல்வர்... பாஜக அரசுக்கு ரூபாய் 40,000 கோடியைக் கொடுத்தாரா பட்நவிஸ்?!


அதன் பிறகு அவர் ராஜினாமா செய்ததும், நவம்பர் 28ம் தேதி  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளார். இந்நிலையில், கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள எல்லப்பூரில், இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அனந்த்குமார் ஹெக்டே சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மகாராஷ்டிராவில் பாஜ.வுக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் தேவேந்திர பட்நவிஸ் இரண்டாவது முறையாக பதவியேற்று 80 மணி நேரத்தில் பதவி விலகினார். இந்த நாடகத்தை ஏன் நடத்தினோம் தெரியுமா? அவையில் எங்களுக்கு பெரும்பான்மை கிடையாது. அப்படி இருந்தும் அவர் ஏன் முதல்வர் ஆனார்? இது அனைவர் மனதிலும் எழக்கூடிய கேள்விதான்.


மகாராஷ்டிரா முதல்வர் பொறுப்பில் மத்திய அரசின் நிதி 40,000 கோடி குவிந்து கிடக்கிறது. சிவசேனா -என்சிபி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக இந்த 40,000 கோடி மாநிலத்தின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு போகாது. அந்த நிதி பல்வேறு விஷயங்களுக்கும் சுயலாபத்துக்கும் பயன்படுத்தப்படும். இதை தடுப்பதற்காகவே நாங்கள் திட்டமிட்டு நாடகம் நடத்தினோம். பட்நவிஸ் முதல்வராக பதவியேற்ற பிறகு 15 மணி நேரத்துக்குள் சில நடவடிக்கைகளை எடுத்து அந்த பணத்தை பாதுகாத்து விட்டார். அந்த பணம் அனைத்தும் மத்திய அரசுக்கு திரும்ப கொடுக்கப்பட்டுவிட்டது. இதை நாங்கள் செய்திருக்காவிட்டால் அடுத்த முதல்வர் பணத்தை என்ன செய்திருப்பார், அந்த பணம் எங்கே போயிருக்கும் என்று உங்களுக்கே தெரியும். இவ்வாறு அனந்த்குமார் ஹெக்டே பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. அனந்த்குமார் ஹெக்டேயின் இந்த பேச்சுக்கு முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். ‘‘மத்திய அரசு எந்த நிதியையும் கேட்கவுமில்லை. மகாராஷ்டிரா அரசு திருப்பி அனுப்பவும் இல்லை’’ என்று பட்நவிஸ் கூறியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP