நாடாளுமன்றத் தேர்தல் - காங்கிரஸ் தேசிய செயற்குழு ஆலோசனை

நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்திகளை வகுப்பது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் குஜராத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி, சோனியா காந்தி, காங்கிரஸ் முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
 | 

நாடாளுமன்றத் தேர்தல் - காங்கிரஸ் தேசிய செயற்குழு ஆலோசனை

நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்திகளை வகுப்பது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் குஜராத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த 1961-இல் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இங்கு நடைபெற்றது. அதன் பிறகு 51 ஆண்டுகள் கழித்து தற்போது அங்கு செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக, சபர்மதி ஆசிரமம் சென்று மகாத்மா காந்திக்கு அவர்கள் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் முதல்வர்கள் அசோக் கெலாட், நாராயணசாமி, பூபேஷ் பகேல் மற்றும் மூத்த தலைவர்கள் சித்தராமையா, உம்மண்சாண்டி, குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோர் அக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு பெறுவதற்கான போராட்டத்தை ஒருங்கிணைத்தவரான ஹார்திக் படேல், இன்று காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP