எனக்கு பினாமி சொத்து இருந்தால் எதிர்க்கட்சிகள் நிரூபிக்கட்டும்:  மோடி சவால் !

பினாமி சொத்து, வெளிநாட்டு சொத்து உள்ளிட்டவைகள் இருப்பதை எதிர்க்கட்சிகள் நிரூபிக்க முடியுமா என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
 | 

உத்தரபிரதேச மாநிலம், பால்லியாவில் பாரதிய ஜனதா வேட்பாளர் வீரேந்தர்சிங் மாஸ்த்தை ஆதரித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேிசய பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு பினாமி சொத்து உள்ளது என்றோ, வெளிநாட்டு வங்கிகளில் பணம் குவித்துள்ளேன் என்றோ, பண்ணை வீடு உள்ளது என்றோ, வணிக வளாகம் உள்ளது என்றோ, சொகுசு கார் உள்ளது என்றோ எதிர்க்கட்சிகள் நிரூபிக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி இருந்தால் நிரூபிக்கட்டும் என சவால் விடுத்துள்ளார். 

மேலும் அவர் பேசுகையில், துல்லிய தாக்குதல்கள் நடத்தி பதிலடி கொடுத்ததாலும், வான்தாக்குதல் நடத்தியதாலும், பயங்கரவாதிகள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். ஆனால் மோடி தேர்தலில் தோல்வியடைய வேண்டும் என்பதே எதிர்க்கட்சியனரின் பிரார்த்தனை என குறிப்பிட்டார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP