வரும் 21ம் தேதி ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்  

வரும் 21ம் தேதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில், டெல்லியில், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 | 

மக்களவை தேர்தல், வரும் 19ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பின், 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேச, காங்., தலைவர் ராகுல் திட்டமிட்டுள்ளார். 

இதற்காக, முக்கிய அரசியல் கட்சிகளுக்கு, காங்., கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நடைபெறும் கூட்டம் என்பதால், தேர்தலுக்கு பிந்தைய நிலை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP