எங்களால் மட்டுமே பலமான அரசை அமைக்க முடியும் - பிரதமர் மோடி

இந்தியா வல்லரசு ஆக வேண்டுமென்றால், அதற்கு பலமான அரசு அமைவது அவசியம். அதை மோடியால் மட்டுமே அமைக்க முடியும். காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அதற்கு ஒத்து வராது என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
 | 

எங்களால் மட்டுமே பலமான அரசை அமைக்க முடியும் - பிரதமர் மோடி

நாட்டில் பலமான அரசு அமைவது அவசியம். அது எங்களால் மட்டுமே சாத்தியமாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் மோடி இன்று பிரசாரம் செய்தார். அப்போது, “கடந்த முறை நீங்கள் எனக்கு பெரும்பான்மை பலத்தை கொடுத்தீர்கள்.  அதனால் உறுதியான முடிவுகளை எடுக்க முடிந்தது. மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது. கடந்த 5 ஆண்டுகளில் நாடு எப்படி வளர்ச்சியடைந்தது என்பதை நீங்களும் பார்த்துக் கொண்டு இருந்தீர்கள்.

இந்தியா வல்லரசு ஆக வேண்டுமென்றால், அதற்கு பலமான அரசு அமைவது அவசியம். அதை மோடியால் மட்டுமே அமைக்க முடியும். காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அதற்கு ஒத்து வராது’’ என்றார் மோடி.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP