மனோகர் பாரிக்கர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை – கூட்டணிக் கட்சித் தலைவர் பேட்டி

மனோகர் பாரிக்கர் இருமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர், வீடு திரும்பிய பாரிக்கர், அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை கவனித்து வருகிறார்.
 | 

மனோகர் பாரிக்கர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை – கூட்டணிக் கட்சித் தலைவர் பேட்டி

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கோவா முன்னணி கட்சியின் தலைவரும், மாநில வேளாண்துறை அமைச்சருமான விஜய் சர்தேசாய் கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை பாரிக்கரை அவரை இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியதாகவும், அவர் நலமுடன் இருக்கும் நிலையில், பதவி விலக வேண்டும் என்ற கேள்வி ஏன் வருகிறது என்றும் விஜய் சர்தேசாய் தெரிவித்தார்.

கனைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர், இருமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதன் பின்னர், வீடு திரும்பிய பாரிக்கர், அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை கவனித்து வருவதாக பா.ஜ.க. தெரிவித்தது.

ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பாரிக்கர் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், அவருக்கு ஆதரவளிக்கும் வகையில், கூட்டணிக் கட்சித் தலைவர் விஜய் சர்தேசாய் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP