வெங்காயம், பூண்டு சாப்பிட விருப்பமில்லை... நிர்மலா சீதாராமன் அதிரடி!

வெங்காயம், பூண்டு சாப்பிட விருப்பமில்லை... நிர்மலா சீதாராமன் அதிரடி!
 | 

வெங்காயம், பூண்டு சாப்பிட விருப்பமில்லை... நிர்மலா சீதாராமன் அதிரடி!

இந்தியா முழுவதுமே உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலை குறித்து இன்று நாடாளுமன்றத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.  வெங்காயம் விலை உயர்வு இல்லத்தரசிகளை கடுமையாக பாதித்துள்ளது. வெங்காயத்தை சேமித்து வைக்கும் நவீன தொழில்நுட்பமும் இந்தியாவில் இல்லை என தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே மக்களவையில் தெரிவித்திருந்தார். 

                                   வெங்காயம், பூண்டு சாப்பிட விருப்பமில்லை... நிர்மலா சீதாராமன் அதிரடி! 

இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். அப்போது இடைமறித்த சில எம்பிக்கள் வெங்காயத்தை நீங்கள் அதிகமாக பயன்படுத்துவதில்லையா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தாம் வெங்காயமோ, பூண்டோ சாப்பிடுவதில்லை என்றும் அது குறித்து எம்பிக்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP