மேற்குவங்கம் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்!

மேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில், அங்கு ஆளுங்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் - 20, பாஜக 21 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது Newstm -இன் கருத்துக்கணிப்பாக இருந்தது. காங்கிரஸ் ஒரேயொரு இடத்தில் வெற்றிப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
 | 

Newstm -இன் கருத்துக்கணிப்பிலிருந்து சற்று மட்டும் மாறுப்பட்டே தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. அதாவது பாஜக 21 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சி 18 இடங்களை கைப்பற்றியுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மேற்குவங்கம் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்!மேற்குவங்கம் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்!

பாஜக இங்கு  21 இடங்களில் வெற்றிபெற வேண்டிய நிலையில், மூன்று இடங்களில் அக்கட்சி வெற்றிவாய்ப்பை இழந்ததற்கு, கடைசிக் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னர் அங்கு, பாஜக -திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்களுக்கு இடையே ஏற்ட்ட மோதல் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

இம்மோதல் வன்முறையாக வெடித்த நிலையில், கொல்கத்தா பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. இந்த பழி பாஜக மீது விழுந்ததால், அக்கட்சி 3 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழக்க வேண்டியதானது எனத் தெரிய வந்துள்ளது.

தரவு உதவி : திரு. சுந்தரம்.நாகராஜன், 

(Psephologist), "NMUSSK" Media And Data Analytics.

இன்ஃபோகிராஃபிக்ஸ் உதவி : எஸ்.சந்திரசேகர் (Data Analyst)

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP