டெல்லியில் ஓர் கூவத்துார்: பலன் தருமா காங்கிரஸ் பார்முலா?

காங்கிரஸ் 125 முதல் 150 இடங்களில் வெற்றி பெறும் என்று வைத்துக் கொண்டால் கூட, அந்த கட்சி ஆட்சி அமைக்க 147 முதல் 122 இடங்கள் கூடுதலாக தேவை. உபி, டெல்லி ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கால நடவடிக்கையை பார்த்தால், அந்த கட்சி இவ்வளவு இடங்களை கூட்டணி கட்சியில் இருந்து பெரும் என்பது சாத்தியம் இல்லை.
 | 

டெல்லியில் ஓர் கூவத்துார்: பலன் தருமா காங்கிரஸ் பார்முலா?

லோக்சபா தேர்தல் நாடகத்தின் உச்சகட்டம் நெருங்கி விட்டது. வரும் ஞாயிற்றுக் கிழமை, 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இத்துடன், மக்கள் தங்கள் தீர்ப்பை எழுதி முடித்துவிடுவார்கள். அதைத் தொடர்ந்து, 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும். இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி, டெல்லியில் எதிர்கட்சிகள் கூட்டத்தை கூட்ட உள்ளது. இந்த கூட்டம், தேர்தலுக்கு பிந்தய கூட்டணி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜகவிற்கு எதிராகவே உள்ளன. அந்த கட்சிக்கு, இம்முறை தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று அவற்றில் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊடகத்திற்கு பின்னாலும் மறைமுக செயல்திட்டம் இருப்பதை அறிந்தால் கூட, கடந்த 2014ம் ஆண்டில், 100 சதவீத இடங்களையும் பாஜக கைப்பற்றிய மாநிலங்களில், இந்த முறை அவ்வாறு நடக்காது என்பது சிறுபிள்ளைக்கு கூட தெரியும்.

இந்த மாநிலங்களில் ஏற்படும் இழப்பை, வடகிழக்கு மாநிலங்கள், மற்றும் தென் மாநிலங்கள் ஈடுசெய்யுமா என்பது சந்தேகம் தான். வழக்கில் எழும் சந்தேகத்தை குற்றவாளிக்கு சாதகமாக ஏற்பதைப் போலவே, இந்த சந்தேகத்தையும் பாஜகவிற்கு எதிரான கட்சிகளுக்கு சாதகமாக ஊடகங்கள் வழங்குகின்றன. அதன் காரணமாத்தான், பாஜக பெரும்பான்மை பெருவதில் சிக்கல் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.

பாஜகவின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையாது என்பது வேதனையானது. கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில், 44 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பிடித்து. அதில் இருந்து இப்போது, 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என பல கணிப்புகள் குறிப்பிடுகின்றன. 

டெல்லியில் ஓர் கூவத்துார்: பலன் தருமா காங்கிரஸ் பார்முலா?

அவற்றில், இந்த வாய்ப்பு உருவாக கடந்த காலத்தில் காங்கிரஸ் எந்த விதத்தில் தன்னை மாற்றிக் கொண்டது என்பது குறித்து சிறிய குறிப்பு கூட கருத்துக்கணிப்புகளில் இல்லை. பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் 3வது கட்சியையும் எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

கடந்த முறை 3வது அணிக்கு வாக்களித்தவர்கள், இந்த முறை அதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடுவார்கள் என்பதற்கு சரியான காரணமும் இல்லை. இது போன்ற சூழலில் தான், ஓட்டுஎண்ணிக்கை தொடங்கும் போதே டெல்லியில் எதிர்கட்சிகளின் கூட்டமும் தொடங்கலாம்.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் பாஜக, 240 இடங்கள் வரை தான் பெரும் என்று கூறப்பட்டுள்ளது .240 இடங்களை பிடிக்கும் என்று வைத்துக் கொண்டாலே பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை பெற, வெறும், 32 எம்.பி.,க்கள் பலம் தான் தேவைப்படும்.  அதற்கு ஒரு சில கட்சிகள் கை கொடுத்தால் போதும் ஆட்சியை பிடித்துவிட முடியும். 

இன்னொருபுறம், காங்கிரஸ் 125 முதல் 150 இடங்களில் வெற்றி பெறும் என்று வைத்துக் கொண்டால் கூட, அந்த கட்சி ஆட்சி அமைக்க 147 முதல் 122 இடங்கள் கூடுதலாக தேவை. உபி, டெல்லி ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கால நடவடிக்கையை பார்த்தால், அந்த கட்சி இவ்வளவு இடங்களை கூட்டணி கட்சியில் இருந்து பெரும் என்பது  சாத்தியம் இல்லை. 

மாநிலத்தில் எதிர், எதிர் நிலைப்பாடுகளை கொண்ட கட்சிகளில் ஒன்று காங்கிரஸ் கட்சியை ஆதரித்தால், மற்றொரு கட்சி வேறு வழயில்லாமல், பாஜகவைத்தான் ஆதரிக்க வேணடும். இந்த நிலைப்பாடே பாஜகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தி விடும்.

டெல்லியில் ஓர் கூவத்துார்: பலன் தருமா காங்கிரஸ் பார்முலா?

அதையும் தாண்டி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும். ராகுல் பிரதமர் என்பதை பெரும்பாலானவர்கள் ஏற்கவில்லை. இதனால் அந்த கட்சி மன்மோகன் சிங், சிதம்பரம் போன்று யாரையாவது நிறுத்தலாம். அவர்களை மற்றவர்கள் ஏற்க வேண்டும். அல்லது சந்திரசேகரைப் போல யாரேனும் ஒருவரை ஆட்சியில் அமர்த்தி காங்கிரஸ் பின்னால் இருந்து இயக்கலாம். 

அப்படி நடந்தால், அது தற்போது கர்நாடகாவில், மஜத தலைவர் குமாராசாமி தலைமையில் இயங்கும், செயல்பாடற்ற மிரட்டலுக்கு உள்ளாகும் அரசாகத்தான் இருக்கும். தற்போதுள்ள சூழ்நிலையில், அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால்,  மாயாவதி, சந்திரசேகர ராவ் போன்றவர்கள் பிரதமர் நாற்காலியில் அமர தயாராக இருப்பது தெரிகிறது.

சந்திபாபு நாயுடுவும் கிட்டத்தட்ட அந்த கனவில் தான் உள்ளார்.  இது போன்ற சூழ்நிலையில், என்ன முடிவு  என்று பேசி முடிவு செய்யத்தான், 23ம் தேதி டெல்லியில் எதிர்கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர்கள் காங்கிரஸ் அணி, கலந்து கொள்ளாதவர்கள் பாஜக அணி என வெட்ட வெளிச்சமாகிவிடும். 

அப்படிப்பார்த்தால், டெல்லியில் ஒரு கூவத்துார் பார்முலா ஒர்க் அவுட் ஆகுமா என்ற கேள்வி எழுகிறது. எனினும், காங்கிரஸ் கட்சி அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவே தெரிகிறது. அது எந்தளவுக்கு பலன் தரும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

அதே நேரத்தில் பாஜக பெரும்பான்மை பெறாமல், அதனை ஆதரிக்க எந்த கட்சியும் முன்வராமல், காங்கிரஸ் வெகு சொற்பமான வெற்றி பெற்ற கட்சியை பிரதமர் பதவியில் அமர்த்தி, அதன் பின்னணியில் இருந்து இயக்கினால் அந்த ஆட்சி ஒரு ஆண்டு வேண்டுமானால் தொடரலாம்; அந்த ஒரு ஆண்டும் மக்களுக்கு வேதனைதான் மிச்சமாகும்.

ஆனாலும், நம் நாட்டு மக்கள் அப்படி ஒரு வேதனையான வாழ்க்கை வாழும் வகையில் ஓட்டளித்திருக்க மாட்டார்கள் எனறே நம்புவோம். அதற்கான விடையும், இன்னும் ஐந்து நாட்களில் தெரிந்துவிடும்.  

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP