புதிய முதல்வர் பதவியேற்பு விழா: மாஜி முதல்வருக்கு அழைப்பு 

ஆந்திராவின் புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஜெகன் மாேகன் ரெட்டி, தன் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் படி, மாஜி முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 | 

ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களில், ஜெகன் மாேகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி அமாேக வெற்றி பெற்றது. அதே சமயம், ஆளும் கட்சியான முதல்வர் சந்திரபாபு நாயுடுவின், தெலுகு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. 

இதையடுத்து, சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநிலத்தின் புதிய முதல்வராக, ஜெகன் மாேகன் ரெட்டி, 30ம் தேதி பதவியேற்கிறார். அவரது பதவியேற்பு விழாவுக்கு, அரசியல் எதிரியும், மாஜி முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஆந்திர மாநில அரசியலில், சந்திரபாபு மற்றும் ஜெகன்மாேகன் ஆகிய இருவரும், எலியும், பூனையுமாக செயல்படும் நிலையில், சந்திராபாபுவை வெறுப்பேற்றுவதற்காகவே, ஜெகன்மாேகன் தன் பதவியேற்பு விழாவுக்கு அவரை அழைத்துள்ளதாக, சந்திராபாபுவின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP