காங்கிரஸ்காரங்க வீட்ல இருந்து மூட்டை, மூட்டையா பணம் பிடிபடுகிறது - பிரதமர் நரேந்திர மோடி

காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் இருந்து மூட்டை, மூட்டையாக பணம் பிடிபடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியமைத்த 6 மாதங்களில் அதை ஏடிஎம் மையமாக காங்கிரஸ் மாற்றிவிட்டது என்றார்.
 | 

காங்கிரஸ்காரங்க வீட்ல இருந்து மூட்டை, மூட்டையா பணம் பிடிபடுகிறது - பிரதமர் நரேந்திர மோடி

காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் இருந்து மூட்டை, மூட்டையாக பணம் பிடிபடுவதை நாம் பார்க்க முடிகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

குஜராத் மாநிலம், ஜுனார்க் என்னும் இடத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் என்னென்ன சாதனைகள் செய்தோம் என்பதை இங்கே சொல்ல வந்திருக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் என்ன செய்ய வேண்டும் என்று உங்களின் யோசனைகளை கேட்கவுள்ளேன். உங்கள் மகன், இந்தக் காவலன் செய்திருக்கும் பணிகள் உங்களுக்கு பெருமையளிக்கிறதா? எங்கள் மீது ஊழல் என்ற சிறு புள்ளி கூட கிடையாது என்பதை எண்ணி நீங்கள் பெருமை அடைந்தீர்களா?

ஆனால், காங்கிரஸ் கட்சியை பாருங்கள். கடந்த 3, 4 நாள்களாக சாக்கு மூட்டைகளில் பணம் பிடிபடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கர்நாடகத்தில் ஆட்சியமைத்து 6 மாதத்துக்குள்ளாக, அந்த மாநிலத்தை ஏடிஎம் மையமாக மாற்றினார்கள். அதேபோல், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைத்து 6 மாதத்துக்குள்ளாக ஏடிஎம் மையத்தை திறந்துவிட்டார்கள் என்றார் மோடி.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP