நாட்டின் எதிரிகளை அடித்தால் இங்கிருப்பவர்கள் அழுகின்றனர் - பிரதமர் நரேந்திர மோடி

தீவிரவாதிகளுக்கு அவர்களது சொந்த மொழியில் பதிலடி கொடுப்பது இங்கிருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை. எதிரிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தும்போது, இங்கிருக்கும் சிலர் அழத் தொடங்குகின்றனர் என்றார் பிரதமர் மோடி.
 | 

நாட்டின் எதிரிகளை அடித்தால் இங்கிருப்பவர்கள் அழுகின்றனர் - பிரதமர் நரேந்திர மோடி

நாட்டின் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இங்கிருப்பவர்களுக்கு ஏன் அழுகை வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். 

உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹா நகரில் பிரதமர் மோடி இன்று பாஜகவை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “தீவிரவாதிகளுக்கு அவர்களது சொந்த மொழியில் பதிலடி கொடுப்பது இங்கிருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை. எதிரிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தும்போது, இங்கிருக்கும் சிலர் அழத் தொடங்குகின்றனர். சர்வதேச அரங்கில், பாகிஸ்தான் அம்பலப்பட்டு நிற்கும்போது, இவர்கள் (எதிர்க்கட்சிகள்) அந்நாட்டுக்கு ஆதரவாக பேசுகின்றனர்’’ என்றார் மோடி.
newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP