ம.பி., முன்னாள் அமைச்சர் மாரடைப்பால் மரணம்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவநாராயண மீனா, உத்தரகண்ட் செல்லும் வழியில் மாரடைப்பால் காலமானார்.
 | 

ம.பி., முன்னாள் அமைச்சர் மாரடைப்பால் மரணம்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவநாராயண மீனா, உத்தரகண்ட் செல்லும் வழியில் மாரடைப்பால் காலமானார். 

மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திக்விஜய் சிங் முதல்வராக இருந்த போது, அவரது தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்தவர், சிவநாராயண மீனா, 68. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த இவர், தன் குடும்பத்தாருடன், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்களில் தரிசனம் செய்வதற்காக புனிதப் பயணம் மேற்கொண்டார். 

அவர் செல்லும் வழியிலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 

சிவநாராயண மீனா மறைவுக்கு, முதல்வர் கமல்நாத், முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் மற்றும் காங்., மூத்த தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP