சிறுபான்மையினர் மத்தியிலும் மவுசு...ரவுசு காட்டும் பாஜக!

மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றுள்ள பாஜக, ரிசர்வ் தொகுதிகள் எனப்படும் எஸ்.சி., எஸ்.டி., தொகுதிகளில் 77 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த எண்ணிக்கை மொத்தமுள்ள எஸ்.சி./எஸ்.டி தொகுதிகளில் 58 சதவீதமாகும்.
 | 

உத்தரப்பிரேதம்  -17 ,மேற்குவங்கம்  -10, தமிழகம் -7, மத்தியப் பிரதேசம் -6 என பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 131 ரிசர்வ் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் எல்லா கட்சிகளும் எஸ்.சி., எஸ்.டி., சமூகங்களை சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக களமிறக்க முடியும்.

நடைபெற்று முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில், இத்தொகுதிகளில் மொத்தம் 77 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. இதில் எஸ்.சி., தொகுதிகள் 46, எஸ்.டி., தொகுதிகள் 31.  2014 மக்களவைத் தேர்தலில், ரிசர்வ் தொகுதிகளில் 67 இடங்களை பாஜக கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது 10 தொகுதிகளில் அதிகமாக வென்றுள்ளது.

இந்த எண்ணிக்கை, காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும்  தனித்து வென்றுள்ள 52 தொகுதிகளை காட்டிலும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கட்சி என்ற வாதம் தவறானது என்பது இதன் மூலம் மீ்ண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP