காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமனம்?

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமனம்?

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து, கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி அறிவித்திருந்தார். ராகுல் காந்தி தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவரே கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை தான் ஏற்கெனவே அளித்துவிட்டதாகவும், இனி தாம் காங்கிரஸ் தலைவர் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கவும் அவர் வலியுறுத்தி இருந்தார். 

இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மோதிலால் வோராவுக்கு வயது 90. இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP