ராஜஸ்தான் தேர்தல் கள நிலவரத்தை தலைகீழாக மாற்றிய மோடி!

ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட தேர்தல் சூறாவளி பிரசாரங்களின் எதிரொலியாக, அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக் கணிப்புகள் தவிடுபோடியாகி, மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
 | 

ராஜஸ்தான் தேர்தல் கள நிலவரத்தை தலைகீழாக மாற்றிய மோடி!

ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட தேர்தல் சூறாவளி பிரசாரங்களின் எதிரொலியாக, அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக் கணிப்புகள் தவிடுபோடியாகி, மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

பிரதமர் மோடியின் அநாயசமான உடல்மொழியுடன்கூடிய ஆக்ரோஷமான பேச்சும், வார்த்தை ஜாலங்களும் பாஜகவின் மிகப் பெரிய பலம் ஏன்றால் அது மிகையல்ல. ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களும் இக்கூற்றை மெய்பிப்பதாக அமைந்தன. 

அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய மோடி,  உடனே ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கினார். அங்கு ஹனுமன்கார்க். சிகார் உள்ளிட்ட 10  இடங்களில், தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

குறிப்பாக, அனுமன்கார்க் நகரில் அவர் செவ்வாய்க்கிழமை  மேற்கொண்ட பிரசாரத்தின்போது, "சீக்கியர்களின் புனித ஸ்தலமான கர்தார்பூர் பாகிஸ்தான் வசம் சென்றதற்கு ,தேசத்தைப் பற்றியும், நம் நாட்டின் பாரம்பரிய பெருமைகள் குறித்தும் காங்கிரஸுக்கு துளியும் அக்கறை இல்லாததுதான் காரணம். கர்தார்பூர் விஷயத்தின் மூலம் ஒட்டுமொத்த சீக்கிய இனத்துக்கே காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டது" என ஆவேசமாக பேசினார். அவரது உணர்ச்சிப்பூர்வமான இந்தப் பேச்சு, ராஜஸ்தான் வாழ் சீக்கிய மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சிகாரில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது, காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையையும் தமது அனல் பறக்கும் வார்த்தைகளால் மோடி எரித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஞாபக மறதி அதிகம் என்றும், யாரோ எழுதி கொடுப்பவற்றைதான் பொதுக் கூட்டங்களில் அவர் ஒப்பிக்கிறார்" எனவும் மோடி கடுமையாக விமர்சித்தார். 

அத்துடன், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தை மனதில் கொண்டு, "தாயும், மகனும்  இந்த முறை சட்டத்தின் பிடியிலிருந்து எப்படி தப்பிப்பார்கள் என பார்ப்போம்?' என்று சோனியாவையும், ராகுலையும் மறைமுகமாக சாடினார். அவரது இந்த சூசகமான வார்த்தைகள் இளம் வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

ஒருபுறம் காங்கிரஸை சகட்டு மேனிக்கு மோடி விமர்சித்தாலும், மறுபுறம் ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசின் சாதனைகளையும்  தமது பிரசாரத்தின்போது  பட்டியலிடவும் அவர் தவறவில்லை. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தேர்தல் பிரசாரமும் பாஜகவுக்கு கூடுதல் பலமாக அமைந்தது.

மோடி, அமித் ஷா இருவரும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக, ராஜஸ்தானில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்கள், அந்த மாநிலத் தேர்தல் முடிவுகளை தலைகீழாக மாற்றிவிட்டது என அரசியல் நோக்கர்கள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர்.

ராஜஸ்தானில் 125 -130 இடங்களில் காங்கிரஸும், 45 -50 இடங்களில் மட்டுமே பாஜகவும் வெற்றி பெறும் என கருதி வந்த அரசியல் விமர்சகர்கள், மோடியின் பிரசாரத்துக்கு பிறகு அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அங்கு தாமரை தான் மீண்டும் மலரும் என தற்போது ஆருடம் கூறியுள்ளனர்.
மோடியின் பிரசாரத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய பங்குச் சந்தை நிலவரங்களும் இதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP