தாயிடம் ஆசி பெற்றார் மோடி !

மக்களவைத் தேர்தலில் வாக்கை செலுத்துவதற்காக, பிரதமர் மோடி தன் சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர், அகமதாபாத் தொகுதியில் வாக்கை பதிவுச் செய்ய உள்ளார்
 | 

தாயிடம் ஆசி பெற்றார் மோடி !

பிரதமர் நரேந்திர மோடி  இன்று காலை அவரது தாயாரை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார்.

மக்களவைத் தேர்தலில் வாக்கை செலுத்துவதற்காக,  பிரதமர் மோடி தன் சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர், அகமதாபாத் தொகுதியில் வாக்கை பதிவுச் செய்ய உள்ளார். முன்னதாக, காந்தி நகரில் உள்ள தனது இல்லத்துக்கு சென்ற மோடி, அங்கு தன் தாயார் ஹீராபென்னிடம் ஆசி பெற்றார்.

அப்போது, கோயில் பிரசாதத்தையும், இனிப்பையும் மோடிக்கு அன்புடன் ஊட்டிவிட்ட அவரது தாயார், சிவப்புநிற சால்வையையும் அவருக்கு அன்பு பரிசாக அளித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் போட்டியிடும் பிரதமர், அகமதாபாத்தில் தனது வாக்கை பதிவு செய்ய உள்ளார். முன்னதாக,  வாக்களிப்பது  நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை. நாட்டு மக்கள் அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP