வாரணாசி வாக்காளர்களுக்கு மோடி உருக்கமான வேண்டுகோள்!

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியிலேயே பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு வரும் 19 -ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வாரணாசி தொகுதி மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 | 

இதுதொடர்பான அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், " தன்னை வாரணாசி வாசி (வாரணாசியில் வசிப்பவர்) எனக் குறிப்பிட்டுள்ள மோடி,  இந்த நகருக்கும், இந்த நகரவாசிகளுக்கும், தமக்கும் இடையே ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பு உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "யாரொருவர் ஒருமுறை காசிக்கு வந்தாலும், அவர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆன உணர்வை அளிக்கும் மகிமை கொண்டது இந்நகரம். இத்தொகுதியின் எம்.பி. என்ற முறையில், கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு முறை வாரணாசிக்கு வரும்போதும் இதனை நான் உணர்ந்துள்ளேன்.

என் தனிப்பட்ட வாழ்விலும், அரசியல் பயணத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் புனித நகரமான  வாரணாசியில் சாலை மேம்பாடு தொடங்கி, கங்கை நதியை தூய்மைப்படுத்துவது வரை பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, இத்தொகுதி மக்களின்  ஒத்துழைப்புடன் மேற்கொண்டுள்ளேன்.

இந்தத் தேர்தலிலும் நான் அமோக வெற்றி பெற வேண்டும் என,  வாரணாசிவாசிகள் ஒவ்வொருவரும் விரும்புவதை, அண்மையில் இங்கு நடைபெற்ற பேரணியின்போது நன்கு அறிந்துக் கொண்டேன். தேர்தலின்போது அளிக்கும் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றுவேன். எனவே, ஜனநாயக திருவிழாவான தேர்தலில் நீங்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும்" என மோடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP