பாதுகாப்பு ஒப்பந்தங்களை பணம் பண்ணும் கருவியாக கையாண்ட காங்கிரஸ் : மோடி குற்றச்சாட்டு

நாட்டின் பாதுகாப்புத் துறை சம்பந்தமான பல்வேறு ஒப்பந்தங்களை பணம் பண்ணும் கருவிகளாக பயன்படுத்திய காங்கிரஸ், அதில் ஊழல் புரிந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
 | 

ஹிமாசலப் பிரதேச மாநிலம், சோலனில் இன்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியது:
நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய, 70 சதவீதம் நாம் வெளிநாடுகளையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் இருந்தது.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தச் சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. அதாவது பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை பணம் பண்ணும் கருவிகளாக பயன்படுத்தி, அதன் மூலம் பெரிய அளவில் ஊழல் புரிந்தனர்.

நம் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடைகளை வாங்கும் ஒப்பந்தத்தை கூட, ஆறு ஆண்டுகள் ஆறப்போட்ட கூத்தெல்லாம் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்துள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் அவர்களது  முன்னோரின் பெயரைச் சொல்லி, தற்போது தேர்தலில் வாக்கு கேட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால், சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள் போன்ற, அவர்களின் முன்னோர் செய்த தவறுகளை பற்றி கேட்டால், ஆமாம்... நடந்தது நடந்துவிட்டது... என்ன  செய்வீர்கள்?  என அகங்காரத்துடன் பதிலளிக்கின்றனர் என்று மோடி கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP