எம்.எல்.ஏ.,க்கள் கட்சித் தாவல்: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

தெலுங்கானாவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் அந்த கட்சியிலிருந்து விலகி, ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் இணைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும் படி, சட்டசபை சபாநாயகர் மற்றும் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 | 

தெலுங்கானாவில், டி.ஆர்.எஸ்., கட்சியை சேர்ந்த சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரசை சேர்ந்த, 12 எம்.எல்.ஏ.,க்கள் அந்த கட்சியிலிருந்து விலகி, டி.ஆர்.எஸ்., கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். தங்களை டி.ஆர்.எஸ்., உறுப்பினர்களாகவே கருதும்படி, சபாநாயகரிடம் மனு அளித்தனர். 

இந்நிலையில், காங்., எம்.எல்.ஏ.,க்களின் செயலை எதிர்த்து, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக, 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும் படி,  சட்டசபை சபாநாயகர் மற்றும் 12 எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP