மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு வேகத்தடையாக நிற்கும் மம்தா: மோடி ஆவேசம்

மேற்கு வங்க மாநிலம் வளர்ச்சி அடைய முடியாமல் வேகத்தடை போல் மம்தாபானர்ஜி செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
 | 

மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு வேகத்தடையாக நிற்கும் மம்தா: மோடி ஆவேசம்

மேற்கு வங்க மாநிலம் வளர்ச்சி அடைய முடியாமல் வேகத்தடை போல் மம்தாபானர்ஜி செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 17, 24, 30 மற்றும் மே 7,12 தேதிகளில் ஐந்து கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்து வருகிறார்.

 சிலிகுரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய  பிரதமர்  மோடி, காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்தார். 

காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யப் போவதாக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி நமது ராணுவ வீரர்களின் கை, கால்களை கட்டிப்போட்டு அவர்களை கையாலாகாதவர்களாக முடக்கி வைக்க முயற்சிப்பதாக மோடி குற்றம்சாட்டினார்.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு உள்பட மத்திய அரசின் எந்த திட்டங்களின் பலன்களும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஏழை,எளிய மக்களை வந்தடைய முடியாதவாறு உங்கள் முதல்வர்  மம்தா பானர்ஜி முட்டுக்கட்டை போட்டு வைத்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கும் அவர் வேகத்தடையாக செயல்படுகிறார். இந்த வேகத்தடை ஒழிக்கப்பட வேண்டும். இந்த மாநிலம் வேகமாக முன்னேற வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றும் மோடி குறிப்பிட்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP