‘மோடி, மோடி’ என்ற கோஷத்தை கேட்டால் தூக்கத்தை இழப்பார் மம்தா பானர்ஜி

‘தாய், தாய்மண், மக்கள்’ இவர்களே முக்கியம் என்ற கோஷத்தை மம்தா வைத்தார். ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக அவர், அன்னையை மறந்துவிட்டார். பாரத நாட்டை துண்டாக்குவோம் என்று கோஷமிட்டவர்களுக்கு ஆதரவாக மாறிவிட்டார் என்றார் மோடி.
 | 

‘மோடி, மோடி’ என்ற கோஷத்தை கேட்டால் தூக்கத்தை இழப்பார் மம்தா பானர்ஜி

‘மோடி, மோடி’ என்ற கோஷத்தை கேட்டால் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு தூக்கம் வராது என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

மேற்கு வங்க மாநிலம், கூச் பெஹர் என்னும் இடத்தில் அவர் இன்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

‘மோடி, மோடி’ என்று இன்னும் அதிகமாக நீங்கள் கோஷமிட்டால், ஒரு சிலருக்கு இன்னும் கூடுதலாக தூக்கமின்மை ஏற்படும். அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? வளர்ச்சித் தடையாக இருப்பவர்தான் (மம்தா). அவர் தூக்கத்தை இழக்க, இழக்க அதிகாரிகள் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் தனது கோபத்தை காட்டுவார். 

‘தாய், தாய்மண், மக்கள்’ இவர்களே முக்கியம் என்ற கோஷத்தை மம்தா வைத்தார். ஆனால், திரிணமூல் காங்கிரஸின் உண்மை முகம் வேறாக இருக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக மம்தா பானர்ஜி, அன்னையை மறந்துவிட்டார். பாரத நாட்டை துண்டாக்குவோம் என்று கோஷமிட்டவர்களுக்கு ஆதரவாக மாறிவிட்டார் என்றார் மோடி.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP