மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் சந்தித்துப் பேசினார்.
 | 

அமைச்சர் ஷாஹித்தையும், அவரது குழுவையும் இந்தியாவுக்கு வரவேற்ற குடியரசுத் தலைவர் மாலத்தீவுகளும் இந்தியாவும் சிறந்த, நெருங்கிய தோழமை கொண்டுள்ளது என்று கூறினார். இந்திய அரசின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனும் தொலைநோக்கில் மாலத்தீவு உட்பட அண்டை நாடுகளும் அடங்கும்.  மாலத்தீவுகளில் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

மக்களை மையமாகக் கொண்டு அவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக மாலத்தீவு அரசின் 100 நாள் திட்டத்தைக் குறிப்பிட்ட குடியரசுத்தலைவர், முன்னுரிமையாக அடையாளம் காணப்பட்டுள்ள துறைகளில்  மாலத்தீவுகள் மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP