மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!!!

மகாராஷ்டிரா முதலமைச்சராக நேற்று மாலை பதவியேற்று கொண்ட சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, நாளை மதியம் 2 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை நிரூபிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 | 

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!!!

மகாராஷ்டிரா முதலமைச்சராக நேற்று மாலை பதவியேற்று கொண்ட சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, நாளை மதியம் 2 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை நிரூபிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மஹா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டு, நேற்று மாலை சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். இதனிடையில், வரும் டிசம்பர் 3ஆம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மஹா விகாஸ் அகாதி கூட்டணிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இவரின் உத்தரவை தொடர்ந்து, அம்மாநிலத்தில் நாளை மதியம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 162 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளதாக கூறியிருந்த முக்கட்சி கூட்டணி தற்போது 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளதாகவும், இந்நிலையில் பெரும்பான்மை நிரூபிப்பது தங்களுக்கு ஓர் விஷயமே இல்லை என்றும் குறிப்பிடுகின்றனர் கூட்டணியினர். 

மகாராஷ்டிரா அரசியலில் சிவசேனா கட்சி மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கும் நிலையிலும், தாக்கரே குடும்பத்தின் முதல் வாரிசாக முதலமைச்சர் பதவியில் அமர்ந்துள்ளார் உத்தவ் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய உத்தவ் தாக்கரேவின் பதவியேற்பை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 6 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP