உச்சகட்ட உள்மோதலில் மகாராஷ்டிர காங்கிரஸ் - அரசியலுக்கு ‘குட்பை’ சொல்லும் இளம் தலைவர்

மும்பை மாநகர காங்கிரஸில் இருக்கும் பிரச்னைகளை ஒதுக்கி தள்ளிவிட முடியாது. தற்போதைய சூழல் நீடிக்குமானால், அரசியலில் நீடிப்பதையே நான் விரும்பவில்லை. இதை ராகுல் காந்திக்கும் தெரியப்படுத்தியுள்ளேன் என்கிறார் இளம் தலைவரான மிலிந்த் தியோரா.
 | 

உச்சகட்ட உள்மோதலில் மகாராஷ்டிர காங்கிரஸ் - அரசியலுக்கு ‘குட்பை’ சொல்லும் இளம் தலைவர்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மகாராஷ்டிர மாநில காங்கிரஸில் உள்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, இளம் தலைவர் மிலிந்த் தியோரா, தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். அரசியலில் நீடிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மும்பை மாநகர காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சஞ்சய் நிரூபம். இவர், கட்சியின் மூத்த தலைவர்களை அனுசரித்து செல்வதில்லை என்ற புகார் தற்போது பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பிற தலைவர்களை ஆலோசிப்பதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது.

உச்சகட்ட உள்மோதலில் மகாராஷ்டிர காங்கிரஸ் - அரசியலுக்கு ‘குட்பை’ சொல்லும் இளம் தலைவர்

மும்பை மாநகர காங்கிரஸைச் சேர்ந்த பல்வேறு மூத்த தலைவர்கள், அண்மையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து இதுதொடர்பாக முறையிட்டதாகவும், சஞ்சய் நிரூபத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ராகுல் காந்தி அதற்கு தெரிவித்ததோடு, தற்போதைய சூழலில் நாடாளுமன்றத் தேர்தல் மீது கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.

உச்சகட்ட உள்மோதலில் மகாராஷ்டிர காங்கிரஸ் - அரசியலுக்கு ‘குட்பை’ சொல்லும் இளம் தலைவர்

சஞ்சய் நிரூபத்துடன் கருத்து மோதலில் இருப்பவர்களில் மிக முக்கியமானவர் மிலிந்த் தியோரா. மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்தவரான முரளி தியோராவின் மகன் அவர். சோனியா காந்தி குடும்பத்துக்கு மிக நெருக்கமானவராக அறியப்படுபவர். கடந்த 2004 முதல் 2104 வரையில் 10 ஆண்டுகள் எம்.பி.யாக மிலிந்த் தியோரா பதவி வகித்துள்ளார். இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சகட்ட உள்மோதலில் மகாராஷ்டிர காங்கிரஸ் - அரசியலுக்கு ‘குட்பை’ சொல்லும் இளம் தலைவர்

ஆனால், நேற்று (பிப்.5) தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பேட்டியில், மிலிந்த் தியோரா பின்வருமாறு குறிப்பிட்டார். அதாவது, “மும்பை மாநகர காங்கிரஸில் இருக்கும் பிரச்னைகளை ஒதுக்கி தள்ளிவிட முடியாது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். தற்போதைய சூழல் நீடிக்குமானால், அரசியலில் நீடிப்பதையே நான் விரும்பவில்லை. அதே சமயம், என்னுடைய உணர்வுகள் குறித்து ராகுல் காந்திக்கு ஏற்கனவே தெரியப்படுத்திவிட்டேன்.’’ என்றார்.

அதேபோல, டுவிட்டரில் மில்ந்த் தியோரா வெளியிட்ட பதிவில், “உள்கட்சி விவகாரங்களை பொதுவில் விவாதிக்க நான் விரும்புவதில்லை. ஆனால், அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவிக்கப்பட்ட கருத்து, மும்பை காங்கிரஸ் என்பது வேற்றுமையில் ஒற்றுமையை பிரதபலிப்பதாகவே இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. தற்போது நடைபெறும் விஷயங்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளேன். நான் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து என்ன முடிவு செய்துள்ளேன் என்பது கட்சித் தலைமைக்கு தெரியும். எனினும், கட்சியின் மேலிடத் தலைமை மீதும், கொள்கைகள் மீதும் முழு நம்பிக்கை உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உச்சகட்ட உள்மோதலில் மகாராஷ்டிர காங்கிரஸ் - அரசியலுக்கு ‘குட்பை’ சொல்லும் இளம் தலைவர்

நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல், மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலும் நெருங்கியுள்ளது. இப்படியொரு சூழலில், காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி மோதல், மிக வெளிப்படையாக நடைபெறுவது, அக்கட்சித் தலைமை விழித்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 
newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP