இடைத்தேர்தலில் போட்டியிட தயாராகும் மத்தியப் பிரதேச முதல்வர்

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் அடுத்த 6 மாதங்களுக்குள்ளாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். இந்நிலையில், சௌசார் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
 | 

இடைத்தேர்தலில் போட்டியிட தயாராகும் மத்தியப் பிரதேச முதல்வர்

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் தேர்தலில் போட்டியிடாமலேயே நேரடியாக முதல்வராகப் பதவியேற்றுள்ள நிலையில், சௌசார் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் 114 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. சிந்துவாரா நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யும், மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அடுத்த 6 மாதங்களுக்குள்ளாக அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும்.

இந்நிலையில், சிந்துவாரா நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட சௌசார் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட கமல்நாத் விருப்பம் தெரிவித்துள்ளார். அங்குள்ள மக்களை கலந்து ஆலோசித்த பின் இந்த முடிவை எடுத்ததாகவும், தனக்கான வாக்குரிமை அங்குதான் உள்ளது என்றும் கமல்நாத் கூறியுள்ளார். சௌசார் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் ரேவ்நாத் சோர் வெற்றி பெற்றிருந்தார். தற்போது கமல்நாத் போட்டியிட வசதியாக, அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP