மத்தியப் பிரதேசம் - பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 177 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது. முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், அமைச்சர்கள் நரோட்டம் மிஸ்ரா, யசோதரா ராஜே சிந்தியா, உள்ளிட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
 | 

மத்தியப் பிரதேசம் - பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 230 தொகுதிகள் உள்ள நிலையில் 177 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது.

பா.ஜ.க. இந்த மாநிலத்தில் கடந்த 2003ம் ஆண்டு இறுதியில் இருந்து தற்போது வரை பா.ஜ.க.வே தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக, தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கடந்த 2005ம் ஆண்டில் இருந்து அப்பதவியில் நீடித்து வருகிறார். இந்தச் சூழலில், ஆட்சிக்கு எதிரான அலை வீசுவதாக பொதுவான கருத்து நிலவுகிறது. அதனை கருத்தில் கொண்டு, வேட்பாளர் பட்டியலில் ஏராளமான புதுமுகங்களை பா.ஜ.க. களமிறக்கியுள்ளது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் அடங்கிய மத்திய தேர்தல் பணிக்குழுவில் இதுதொடர்பாக விவாதம் நடத்தி வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், புத்னி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். மாநில அமைச்சர்கள் நரோட்டம் மிஸ்ரா, யசோதரா ராஜே சிந்தியா, மூத்த தலைவர்கள் சுரேந்திர பட்வா, அர்ச்சனா சிட்னிஸ், ஜிதேந்திர கெலாட் உள்ளிட்டோரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த மாநிலத்தில், வரும் 28ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP