காங்கிரஸ்காரர்களை போலவே அவர்களின் தேர்தல் அறிக்கையும் பொய் : மோடி விமர்சனம்

காங்கிரஸ்காரர்களை போலவே அவர்களின் தேர்தல் அறிக்கையும் பொய்யாகவே உள்ளது. எனவே, அதனை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது.
 | 

காங்கிரஸ்காரர்களை போலவே அவர்களின் தேர்தல் அறிக்கையும் பொய் : மோடி விமர்சனம்

காங்கிரஸ்காரர்களை போலவே அவர்களின் தேர்தல் அறிக்கையும் பொய்யாகவே உள்ளது. எனவே, அதனை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில், "2020 -க்குள் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள், பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரப்படும்" என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், அருணாசல பிரதேச மாநிலம், பஸிகாட் பகுதியில் பிரதமர் மோடி இன்று பொதுத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை விமர்சித்து அவர் பேசியது:

அருணாசல பிரதேச மாநிலத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில், இம்மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் விமானப் போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை பாஜக அரசு செய்து கொடுத்துள்ளது. 

ஆனால், அரை நூற்றாண்டுக்கு மேலாக நாட்டை ஆண்ட காங்கிரஸ், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் வளர்ச்சி, வளர்ச்சியென வெறும் வாய்ஜாலம் மட்டுமே செய்து கொண்டிருக்கின்றனர். வளர்ச்சித் திட்டங்களை உண்மையில் நடைமுறைப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியது பாஜக தான்.

காங்கிரஸ்காரர்களை போலவே அவர்களின் தேர்தல் அறிக்கையும் ஊழல் நிறைந்ததாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொய்யான தேர்தல் அறிக்கையை பொதுமக்கள் புறந்தள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP