ராகுல் முதலில் அமேதி தொகுதியை கவனிக்கட்டும்: டி.ஆர்.எஸ் எம்.பி காட்டம்!

நிஜாமாபாத் அடைந்துள்ள வளர்ச்சி குறித்து தொகுதி மக்கள் நன்கு அறிவர். கடந்த காலங்களில் ராகுல் காந்தி இங்கு எத்தனை முறை வந்திருப்பார்? அவர் தற்போது வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக இவ்வாறெல்லாம் பேசி வருகிறார்.
 | 

ராகுல் முதலில் அமேதி தொகுதியை கவனிக்கட்டும்: டி.ஆர்.எஸ் எம்.பி காட்டம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதலில் தமது எம்.பி தொகுதியான அமேதியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினால் நல்லது என்று தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், நிஜாமாபாத் தொகுதி எம்.பியுமான கவிதா தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கா்ங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அந்த மாநிலத்துக்குட்பட்ட நிஜாமாபாத் தொகுதியில் அண்மையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, இத்தொகுதியின் வளர்ச்சி குறி்த்து அவர் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலடி தரும் வகையில், அத்தொகுதியின் எம்.பியான கவிதா, ஹைதராபாதில் நேற்று (வெள்ளிக்கிழமை) கூறியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் நிஜாமாபாத் அடைந்துள்ள வளர்ச்சி குறித்து தொகுதி மக்கள் நன்கு அறிவர். கடந்த காலங்களில் ராகுல் காந்தி  இங்கு எத்தனை முறை வந்திருப்பார்? அவர் தற்போது வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக இவ்வாறெல்லாம் பேசி வருகிறார்.

பிறரின் தொகுதியை பற்றி பேசுவதற்கு முன், ராகுல் தமது அமேதி தொகுதியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினால் நல்லது. ஏனெனில் அவரது தொகுதி வளர்ச்சியில் இன்னும் பின்தங்கியே உள்ளது என கவிதா கூறினார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP