பொய்களின் அரசன் ராகுல் காந்தி – சிவராஜ் சிங் சௌஹான்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 தினங்களுக்குள் விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். ஆனால், 2 மாதங்களாகியும் அது நிறைவேறவில்லை என்று குற்றம்சாட்டினார் சிவராஜ் சிங் சௌஹான்.
 | 

பொய்களின் அரசன் ராகுல் காந்தி – சிவராஜ் சிங் சௌஹான்

பொய்களின் அரசனான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தலுக்கு முன்பு பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சௌஹான் குற்றம்சாட்டினார்.

 

இதுதொடர்பாக சௌஹான் கூறியதாவது:

ராகுல் காந்தி பொய்களின் அரசன். மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் அனைத்தும் 10 நாள்களுக்குள் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், இரண்டு மாதங்களாகியும் அதுபோல எதுவும் நடக்கவில்லை. கடன் தள்ளுபடி நடவடிக்கையை இழுத்தடித்து வருகின்றனர். முதலில், பல விவசாயிகளை பயனாளிகள் பட்டியலில் சேர விடாமல் தடைகளை ஏற்படுத்தினார்கள். கடன் தள்ளுபடிக்காக விவசாயிகளிடம் விண்ணப்பம் பெற்று வருகிறார்கள். கடன் வாங்கியோர் பட்டியல் வங்கிகளின் இணையதளத்தில் இருக்கும்போது விண்ணப்பம் எதற்கு? அந்தப் பட்டியலை சரி பார்த்து, கடனுக்கான தொகையை அரசே செலுத்திவிடலாம்.

இதேபோல, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று பொய்யான வாக்குறுதியை தெரிவித்துள்ளனர் என்றார் சிவராஜ் சிங்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP